என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
தேங்காயில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா?
- உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
- இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காயின் அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு, நீங்கள் தேங்காய்யை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.
எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கிறது. அதோடு இதில் நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.
தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது
தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்