search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கனவு காணுபவரா நீங்கள்?
    X

    கனவு காணுபவரா நீங்கள்?

    • கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது.
    • பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது.

    மனிதர்கள் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். இந்த கனவுகளில் பெரும்பாலும் நிகழ்கால வாழ்வுக்கு தொடர்பே இல்லாதவை ஆகும்.

    இந்த கனவுகள் ஏன் வருகின்றன? மூளை இதனை ஏன் உருவாக்குகிறது? என்பது குறித்து நரம்பியல் மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை. பொதுவாக மனிதர்கள் தூக்கத்தில் கண்களை மூடி இருந்தாலும் மூளை தனது சுய கட்டுப்பாட்டை மீறி தனது செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் தோன்றுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    கனவு என்பது ஒரு நபரின் ஆன்மா அல்லது அவர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் செயலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் கனவுகளில் தோன்றும் சம்பவங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு பெரும்பாலும் பொருத்தம் இல்லாததாகவே தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஆரோக்கியமான மனநிலை உள்ள நபர் கனவு காணும்போது அந்த கனவில் வரும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும்போது தெளிவான கனவுகள் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் உறக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் கனவுகளின் அர்த்தத்தை அந்த நபர் அடையாளம் காண முடியாமல் குழப்பத்தை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பெரும்பாலான சூழ்நிலையில் கனவுகள் தூக்கத்தை பாதிக்காது. ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதி கனவு ஆகும். தூக்கத்தை கெடுக்கும் கனவுகள் தொடர்ந்து வந்து அன்றாட சிந்தனையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    Next Story
    ×