என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
தினமும் ஒரு வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
- வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
- நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை..
இதய ஆரோக்கியம்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
மூளை செயல்பாடு
மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். அறிவாற்றல் திறனையும் அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்பு
வால்நட்டில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
உடல் எடை
வால்நட் அதிக கலோரிகள் கொண்டதாக இருந்தாலும் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதனால் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக உட்கொள்ளப்படும் கலோரி அளவை குறைக்கவும் செய்யும்.
செரிமானம்
அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிடும்போது எளிதில் செரிமானமாகிவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் அதிகரிக்கும். அதில் செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் உள்ளது.
எலும்பு ஆரோக்கியம்
வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் தேவை. அவை வால்நட்டில் இருக்கின்றன. அதனை தினமும் சாப்பிடுவது அதிக பலனை தரும்.
சரும ஆரோக்கியம்
அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன.
ரத்த சர்க்கரை
அக்ரூட் பருப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
தூக்கம்
மெலடோனின் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் தன்மை அக்ரூட் பருப்புக்கு உண்டு. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனாகும். இதனால் தூக்கத்தின் தரம் மற்றும் தூங்கும் கால அளவை மேம்படுத்த உதவும்.
நாள்பட்ட நோய்கள்
அக்ரூட் பருப்பில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்