search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
    X

    வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

    • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
    • அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

    வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.

    * 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

    * உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.

    * வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.

    * வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.

    * வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

    * நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

    * அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.

    * வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.

    * கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.

    * 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

    Next Story
    ×