search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சர்க்கரை நோயாளிகள் தினமும் எலுமிச்சை ஜூஸ் உப்பு சேர்த்து குடிக்கலாமா?
    X

    சர்க்கரை நோயாளிகள் தினமும் எலுமிச்சை ஜூஸ் உப்பு சேர்த்து குடிக்கலாமா?

    • எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்துவிடும்.
    • எலுமிச்சை பழச்சாற்றை அருந்தியவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.

    அமெரிக்கன் டயாபடீஸ் அசோசியேஷன் எலுமிச்சை பழத்திற்கு சூப்பர் புட் என்று பெயர் சூட்டியுள்ளது. ஏனென்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு இதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. ஒரு எலுமிச்சை பழத்தில் 29 கலோரிகள், 2.8 கிராம் நார்ச்சத்து மற்றும் ஒரு நாளின் வைட்டமின் சி தேவையில் பாதி அளவு இருக்கிறது.

    எலுமிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனே அதிகமாகாமல் பார்த்துக் கொள்கிறது. எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி, பாலிபெனால் போன்ற ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இன்சுலின் உணர் திறனை அதிகரித்து இன்சுலின் திறம்பட செயல்பட உதவி செய்கிறது.

    எலுமிச்சைப்பழத்தின் சர்க்கரை உயர்தல் குறியீடு 20 ஆகும். அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக தினமும் எலுமிச்சையை பழமாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனினும் எலுமிச்சம் பழத்தில் ஆக்சலேட் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.

    எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்துவிடும். அதனால் எலுமிச்சை பழச்சாற்றை அருந்தியவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். மேலும் வயிற்றில் அல்சர் அல்லது அசிடிட்டி இருப்பவர்கள் எலுமிச்சை பழத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    Next Story
    ×