search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் இருதய பாதிப்பு
    X

    ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் இருதய பாதிப்பு

    • மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஸ்மார்ட் போன் ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது.

    இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலையில், எழுந்ததில் தொடங்கி போனையே பார்ப்பது தான் வேலையாக உள்ளன.


    நாட்டிலும், உலகிலும் என்ன நடந்தாலும், மற்றவர்களுடை நிலையை ஸ்டேட்டஸ் மூலம் தெரிந்துகொள்கிறோம். மேலும் பொருட்களை ஆர்டர் செய்கிறோம்.

    இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையை ஸ்மார்ட் போனால் தான் நம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


    எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா அவ்வளவு அதிகமாக மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி போன் நீண்டகாலமாக பயன்படுத்துவதால் உணர்ச்சி வசப்படுதல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவை ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது.

    உதாரணத்துக்கு சாப்பிடும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம். அவ்வாறு சாப்பிடும் போது மனதளவில் சாப்பிட முடிவதில்லை. பல சமயங்களில் போனிலேயே மூழ்கிவிடுகிறோம்.

    இதனால் அதிகமாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகிறது. எடை அதிகரிப்பு பிரச்சினை, அதுமட்டுமின்றி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை, ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.


    மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் போனில் நோட்டிபிகேஷன்களை சரிபார்க்கும் போது உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. கார்டிசோலின் அளவு அதிகரிப்பதால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இந்தமாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க இரவில் தூங்குவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பு ஸ்மார்ட்போனை பயன்படுத்தக்கூடாது. கழிவறையில் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    Next Story
    ×