search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சாப்பிட்ட உடனே வயிற்றுப்பொருமல் அதிகமாக உள்ளதா? சரியாக உணவு சாப்பிடமுடியவில்லையா?
    X

    சாப்பிட்ட உடனே வயிற்றுப்பொருமல் அதிகமாக உள்ளதா? சரியாக உணவு சாப்பிடமுடியவில்லையா?

    • நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
    • வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    பொதுவாக உணவில் பெருங்காயம், மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்துதல் நல்லது. தண்ணீரை மேல்நோக்கிய நிலையில் குடிக்காமல், வாய் வைத்து அருந்த வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். வேகமாகவோ அல்லது பேசிக்கொண்டோ உண்ணக்கூடாது. வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    உணவுமுறை:

    * சுண்டைவற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் வகைக்கு தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி வகைக்கு 2 கிராம், பெருங்காயம் அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு ஒரு கிராம் இவைகளை வறுத்து பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மதிய உணவின் போது இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் நெய்விட்டுப்பிசைந்து சாப்பிட வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், வாயுத்தொல்லைகள் சரியாகும்.

    * சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சமஅளவில் எடுத்து பொடித்து தேவையான போது, அரை டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்து வர, ஏப்பம், வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல் தீரும்.

    * சீரகம், ஓமம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துப் பொடித்து, அதனுடன் பூண்டினை நெய்விட்டு தனியாக வறுத்து அனைத்தையும் பொடித்து, சாதத்துடன் இந்துப்பு சேர்த்து மோர் விட்டு பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

    * மோருடன் வறுத்த பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள் சிறிதளவு வீதம் கலந்து உப்பிட்டுப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பிரண்டை வடகம், கண்டை வற்றல் சூரணம், ஏலாதி சூரணம், அட்டாதி சூரணம், சீரக வில்வாதி லேகியம், வில்வாதி லேகியம். குன்ம குடோரி மெழுகு போன்ற மருந்துகள் உள்ளன.

    Next Story
    ×