search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மூக்கிரட்டை கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
    X

    மூக்கிரட்டை கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?

    • வேர், தண்டு என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டவை.
    • சிறுநீரகக் கல், பித்தப்பை கல் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

    நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒருவகை களைச்செடி தான் இந்த மூக்கிரட்டை கீரை. தெருவோரங்களிலும், வயல்களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் இந்த கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

    இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் நமது முன்னோர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்து வந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

    இக்கீரைக்கு சாரணத்தி, சாரணைக் கொடு, புனர்நவர் எனும் வேறு பெயர்களும் உண்டு. இது கிராமப்புறங்களில் அனைத்து தட்பவெட்ப சூழலையும் ஏற்று நன்கு வளரக்கூடிய ஒருவகை கொடியாகும்.

    இந்த கீரையில் அடர்நீல நீற பூக்கள் மற்றும் வெண்மை நிற பூக்கள் காணப்படும். பூக்களின் நிறங்களின் அடிப்படையில் இருவகை மூக்கிரட்டை கீரை உள்ளன. ஆனால் இரண்டுமே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டு சிறந்து விளங்குகிறது.

    மூக்கிரட்டை கீரையின் அறிவியல் பெயர் பெயர் ஹேவியா டிஃப்பூசா ஆகும். இது நிகீடாஜினேகி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இந்தியா, இலங்கை, ஐரோப்பா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

    மேலும் இதனை ஒரு மூலிகைத் தாவரமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருப்பது சிறப்புக்குரியது. மூக்கீரட்டையின் இலை, வேர், தண்டு என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டவை.

    மூக்கிரட்டையின் மருத்துவ குணங்கள்:

    மூக்கிரட்டை சிறுநீரகக் கல், பித்தப்பை கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.உடலில் ஏற்படும் வாதம் சம்பந்தமான நோய்களை நீக்க உதவுகிறது.

    மூளைக்கு ஆற்றலை அழித்து சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெருத்து காணப்படும். அதற்கு மூக்கிரட்டையை கீழாநெல்லியுடன் சேர்த்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த முடியும்.

    அந்த நீரை வெளியேற்ற மூக்கிரட்டை உதவுகிறது. மூக்கிரட்டையுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும்.

    செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னையை குறைக்க உதவும். சரும நோய்களை குணப்படுத்தி முகப்பொலிவினை மேம்படுத்த உதவும்.

    கீரைகள் இயல்பாகவே அதிக சத்துக்களைக் கொண்டுள்ளதால் ரத்தசோகை பிரச்னையை முழுவதும் குறைக்கக் கூடும்.சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி சிறப்புடன் செயல்பட உதவும்.

    உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அகற்றியும், கெட்ட கொழுப்புகளை நீக்கியும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.

    உணவாலோ வேறு பாதிப்பின் காரணமாகவோ, உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது, அதனால், உடலில் நமைச்சல் எனும் அரிப்பு உண்டாகும். இதனால், எப்போதும், கைகளால் அரிப்புள்ள பகுதியை சொரிய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதுவே, முக்கியமான அலுவல்களில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் சொரிய வைத்து, மற்றவர்கள் என்ன என்று கேட்கும் அளவுக்கு, மிக்க ஒரு மன வேதனையை அளிக்கும் செயலாக மாறிவிடும்.

    இந்த பாதிப்பைப் போக்க, உலர்த்திய மூக்கிரட்டை வேரை சற்று, இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, ஆற வைத்து, அந்த நீரில் சற்று விளக்கெண்ணை கலந்து தினமும் இரு வேளை பருகி வர, ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல் அரிப்பு விலகி, சருமத்தில் புதுப்பொலிவு ஏற்படும்.

    ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இக்கீரையில் நிறைந்து உள்ளதால் தேவையில்லாத ஆக்ஸிஜன்களை உடலிலிருந்து அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இதன் இலைகள் கண் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மலட்டுத்தன்மை போக்க உதவுகிறது.

    ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த மூக்கிரட்டை உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட இக்கீரையை சரியாக இனம் கண்டு முன்னோர்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பலன் கிடைக்கும்.

    மூக்கிரட்டை கீரையை சமைக்கும் முறைகள்:

    மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் இது கட்டுப்படுத்தும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த மூக்கிரட்டை கீரை. மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள். இந்த பொடியை வாங்கி வந்து வெந்நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை நன்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    வேர்களை காயவைத்து, பொடிசெய்து, சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.மூக்கிரட்டை கீரையில் ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும், தட்டிய பூண்டு பற்கள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.இந்த ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும்

    Next Story
    ×