என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுங்கள்
- உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம்.
- மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆரஞ்சுக்கு இருக்கிறது.
* உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.
* காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன.
* தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பிரச்சினைக்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்க உதவும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். விரைவில் முதுமை நெருங்காமல் தடுக்கும்.
* கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.
* ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு பழத்தில் நரின்கைன், ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருக்கின்றன. அவை மூட்டு வலிக்கு நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. கால்சியம் ஆக்ஸலேட் எனும் கல் உருவாகுவதை தடுக்கும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.