search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆளி விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
    X

    ஆளி விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம்.
    • ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளது.

    ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது நல்லது. ஆளி விதைகளை வறுப்பதால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பைடிக் அமிலம் நீக்கப்படுகிறது. முளைக்க வைத்து சாப்பிடுவதும் நல்லது. ஆளி விதைகளை சாப்பிட்ட பின்னர் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

    * ஆளி விதைகளை ஓட்ஸ், சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது விரும்பும் பிற உணவுகளில் சேர்த்து உண்ணலாம்.

    * ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை நமது பெரிய குடலை சேதப்படுத்தாமல் பாதுகாக்கின்றன. கொழுப்பை கரைக்கிறது. சர்க்கரையை குறைக்கிறது.

    * ஆளி விதை ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம்.

    * ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளது. அவை நீண்ட நேரம் பசி உணராமல் தடுக்கின்றன.

    * உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆளி விதைகளை உண்பதால் உள் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

    * தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம், வலி மற்றும் எரியும் தன்மையைப் போக்க ஆளி விதைகளை உண்ண வேண்டும். ஆளிவிதைகள் இந்த பிரச்சனைகளை விரைவில் நீக்கும்.

    * ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்று அழைக்கப்படுகின்றன. இவை மூளையை ஆரோக்கியமாக்கும்.

    * ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து, பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா-3 இதயத்தை பலப்படுத்துகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும்.

    * தலைமுடி நீளமாக வளர, வலுவாக இருக்க ஆளி விதைகளை சாப்பிடலாம்.

    Next Story
    ×