search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    பித்தத்தை குறைக்கும் வழிமுறைகள்
    X

    பித்தத்தை குறைக்கும் வழிமுறைகள்

    • எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தம் குறையும்.
    • பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    பித்தம் என்பது உடல் உஷ்ணமாகும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கக்கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது.

    பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும். பித்தம் அதிகமானால் உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு ஏற்படும். உடல் வறட்சியாக இருக்கும். தோல் கடினமானதாக மாறும். நாக்கு வறட்சியாக காணப்படும். வாய் கசப்பு தன்மை உடையதாக இருக்கும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும். இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

    பித்தத்தை குறைக்கும் உணவு முறைகள்

    * இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    * இஞ்சி சாறு, வெங்காய சாறு இவற்றுடன் தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    * மாம்பழத்தை பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தம் குறையும்.

    * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தம் தீரும்.

    * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    * கமலாப்பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும்.

    * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    * அரசமர குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    Next Story
    ×