என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
அலுவலகமும் நட்புறவும்...
- `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும்.
- சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.
கல்லூரிக்கு பிறகான வாழ்வில் பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.
ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சனைகளை எளிதாகப் புரிந்துகொள்வார். பிரச்சனையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சனை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம்.
`ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்' நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.
எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு ஆறுதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.
அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!
நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்