search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நச்சாக மாறும் உப்பு: உப்பு அதிகமாக சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
    X

    நச்சாக மாறும் உப்பு: உப்பு அதிகமாக சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

    • பாக்கெட்டு உணவில் உப்பின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டும்.
    • கூடுதலாக உப்பு எடுத்துக்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும்.

    உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    நாம் எப்போது வீட்டு உணவை விடுத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அதில் இருந்து தான் உடலில் அதிக உப்புச்சத்து அதிகரிக்கத்தொடங்கியது.

    அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளான பீட்ஸா, பர்கர், பாஸ்தா போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு முக்கியமான காரணம் என்னெவென்றால் பொதுமக்களுக்கு புரியும்படி பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் உப்பு எந்த அளவிற்கு சேர்க்கப்படுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொதுமக்களும் அதனை வாங்கி பயன்படுத்தும் போது பாக்கெட்டுகளில் உள்ள உணவில் உப்பின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    இந்த முறைகள் எல்லாம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. இதனை பாடபுத்தகங்களின் வாயிலாக நாம் கொண்டு சென்றால் பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும்.

    இப்போது மக்களை தேடி மருத்துவம் முறையில் 1 கோடி பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு மனிதனுக்கு சோடியம் என்பது தேவை தான். அது பிளாஸ்மா அதிகப்படுத்துவதற்கும், செல்கள் செயல்படுவதற்கும் தேவை. நரம்பு மண்டலம் இயங்குவதற்கும் போதுமானதாக் இருந்தால் போதும். ஆனால் கூடுதலாக தேவை இல்லை. உதாரணமாக ஒரு நாளை 5 கிராம் உப்பு தேவை என்றால், நாம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம்.

    நாம் கூடுதலாக உப்பு எடுத்துக்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×