search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம்
    X

    வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம்

    • இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது.
    • புகை பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும்.

    வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.


    மன அழுத்தம், பாக்டீரியா, பூஞ்சை தொற்று, வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் 'பி' சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. புகை பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும்.

    வீட்டு வைத்திய முறைகள்:

    1. கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்

    2. சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலை-மாலை 1 தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு, உதட்டுப்புண் குணமாகும்

    3. திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்

    4. ஒரு பிடி நெல்லி இலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம் சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்

    5. மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்

    6. மணத்தக்காளி இலைகளை மென்று சாறை 1 நாளைக்கு 6 முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்

    7. மருதாணி இலைகளை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்.


    8. ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கும்

    9. சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம், வாய்ப்புண் குணமாகும்

    10. கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்.

    Next Story
    ×