என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
சிறுதானிய உணவுகளின் சிறப்பு அம்சம்
- நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு வடிவில் சுவைக்கலாம்.
- சிறுதானிய பவுடர் மிக்ஸ்களை பார்க்க முடிகிறது.
சிறுதானியங்களை அவித்தும், வேகவைத்தும் சாப்பிடலாம். அரைத்து மாவு வடிவில் மாற்றி, திரவ வடிவிலும் குடிக்கலாம். அல்லது மாவில் நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு வடிவில் சுவைக்கலாம். சிலர், பல சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, வெறும் மாவு வடிவிலும் சாப்பிடுகிறார்கள். உங்களுடைய விருப்பம்தான்... விருப்பமான உணவு வகைகளாக சாப்பிடலாம்.
இன்று பலரது வீடுகளில், சிறுதானிய பவுடர் மிக்ஸ்களை பார்க்க முடிகிறது. தங்களது குழந்தைகளுக்கு பாலில் கலந்து குடிக்க கொடுக்கிறார்கள். அதேபோல, பலரது வீடுகளில் சிறுதானிய தின்பண்டங்களை பார்க்க முடிகிறது. லட்டு, பர்பி வகை இனிப்புகள்... என பல பதார்த்தங்களை, தயாரிக்கிறார்கள். இல்லையேல், என்னை போல, சிறுதானிய பதார்த்தம் தயாரித்து கொடுப்பவர்களிடம் வாங்கி உண்ண கொடுக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான்.
இன்று நிறைய வீடுகளில் அரிசியில் வெண் பொங்கல் சமைப்பதற்கு பதிலாக தினை பொங்கல், குதிரைவாலி பொங்கல் போன்றவையே தயாராகின்றன. மேலும் அரிசி சோறுக்கு மாற்றாக கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பாவில் தயாராகும் உணவுகளையும் சாப்பிட பழகிக்கொண்டிருக்கிறார்கள். இவை மட்டுமின்றி, குதிரைவாலி, கம்பு, பாரம்பரிய அரிசி ஆகியவற்றில் கஞ்சி தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
இட்லி, அடை, நூடுல்ஸ் போன்ற உணவுகளும் சிறுதானியங்களில் தயாரிக்கப்படுகிறது.
சிறுதானியங்களின் சிறப்பு
கம்பு, கேழ்வரகு, சாமை, தினை... இப்படி வரிசைக்கட்டி நிற்கும் எல்லா சிறுதானியங்களிலும் பிரத்தியேக மருத்துவகுணம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் கெட்டக்கொழுப்புகளை அகற்றும் பணிகளை இவை செய்கின்றன. உடல் ஆரோக்கியம், உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
ஒருசில சிறுதானியங்கள், உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. சிறுதானியங்களின் அவசியத்தை உலகறிய செய்யவே, 2023-ம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளனர்.
சிறுதானிய உணவுகள், சுவையில் சிறப்பானதாக இருக்கும். தினை, கருப்பு கவுனி போன்றவை எல்லாம், சுவைகளில் சிறந்தவை. அதன் சுவையை, வேறு உணவுகளில் உணர முடியாது. அதேசமயம், குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, வரகு போன்ற சிறுதானியங்கள் எல்லாம், மருத்துவ குணம் கொண்டவை. இவற்றிலும், சுவையும் உண்டு. ஆரோக்கியமும் உண்டு.
இந்த வருட தீபாவளி கொண்டாட்டங்களுக்கே, பல இடங்களில் சிறுதானிய உணவுகளை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் ஆரோக்கியமானதுதான். அடுத்த வருட பண்டிகை கொண்டாட்டங்களில், நிச்சயம் சிறுதானிய இனிப்புகளை அதிகமாக சுவைக்க முடியும். குறிப்பாக, அல்வா, பால்கோவா, ஜாமூன் ஆகிய வடிவங்களில் சுவைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்