என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
பொது மருத்துவம்
![பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள் பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள்](https://media.maalaimalar.com/h-upload/2024/07/22/3494707-newproject6.webp)
பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது.
- கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.
'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:-
1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது
2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும்
3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது
4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது
5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது
6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும்
7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும்
8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது
9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்
10) அதிக ரத்த சர்க்கரை காரணமாக ஜீரண நரம்பு பாதிக்கப்படுவதால் பசியும் செரிமானமும் குறைந்துவிடும்
11) ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் உடல் சோர்வாகி பசியும் குறைந்துவிடும்
12) வயது ஆக ஆக உங்களது ஜீரண உறுப்புகள் வேலை செய்வதும் குறைந்துவிடும்,
13) மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை ஜீரணத்தை மெதுவாக்கி பசியார்வத்தைக் குறைத்துவிடும்
14) உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது
15) கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.
பசி என்பது உடலில் உண்டாகும் இயற்கையான மாற்றங்களினால் ஏற்படும் ஒரு செயலாகும். பசி இல்லை என்றாலும் கூட ஓரளவாவது சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம் தான் உங்களது உடலுக்குத் தேவையான கலோரி சக்தி வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உப்பு, சர்க்கரை, புரதம், மாவுச்சத்து கொழுப்புச்சத்து முதலியவை கிடைக்கின்றன.
ஒரு வேளை, இரண்டு வேளை பசி எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் பசியில்லாமல் இருந்தால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் நல்லது.