search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள்?
    X

    டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள்?

    • சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும்.
    • சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

    டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை கடைகளில் நேரடியாக வாங்கி பயன்படுத்துவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


    இன்றைக்கு, காய்ச்சல், தலைவலி என்று வந்துவிட்டால் உடனே கடையில் சில மாத்திரைகளை வாங்கி எடுத்துக்கொள்வது எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை பார்க்கலாம்.

    இதுபோன்ற மாத்திரைகள் வலி மற்றும் காய்ச்சலை உடனடியாக குறைக்கும். ஆனால் சில நேரங்களில் உடலில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது அழற்சி நோய்கள் போன்ற தீவிர நிலைகளின் அறிகுறிகளை மறைத்துவிடும். இதனால், உடலில் ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்பை கண்டறிய முடியாமல் சரியான சிகிச்சை பெற முடியாது போகும்.


    இதுபோன்ற மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும். அதில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

    இந்த வகை மாத்திரைகளின் தொடர் பயன்பாடு சில நேரங்களில் தோல் மற்றும் நுரையீரல் அழற்சிக்கு காரணமான எபிடெர்மல் நெக்ரோலிஸ் என்ற தீவிரமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தான நிலையாக கருதப்படுகிறது.

    ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்கள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் எக்காரணம் கொண்டும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.


    சில வகை மாத்திரைகள் ஆல்கஹாலுக்கு மோசமான எதிரியாகும். அது போன்ற மாத்திரைகளை தாமாக கடைகளில் வாங்கி உட்கொண்டு, மது அருந்துவது கல்லீரல் பாதிப்பை தீவிரமாக்கும். இதன் தொடர் விளைவு கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    Next Story
    ×