search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மாரடைப்பு எதனால் வருகிறது?
    X

    மாரடைப்பு எதனால் வருகிறது?

    • உடல் அதிகமாக வியர்க்கும்.
    • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.

    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. பின்னர் வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு.

    இந்த வலியை முதன்முறையாக தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

    பரம்பரை, அதிக உடல் உழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்ப நிலையால் திடீரென தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது (மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை) போன்ற காரணங்கள் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.

    புகைப்பது, மது குடிப்பது, உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத்தசை அழற்சி போன்ற நோய்களைக்கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையை கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

    'நிமோனியா' எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி நோய், கடுமையான காசநோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும். பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சு வலி வரலாம்.

    Next Story
    ×