என் மலர்
பொது மருத்துவம்
செவ்வாழை பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
- செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும்.
- செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட செவ்வாழை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இந்த பழத்தை சாப்பிட உகந்த நேரம் காலை 6 மணி. அது சாத்தியமில்லை என்றால் காலை 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேவேளையில் உணவு சாப்பிட்ட உடன் செவ்வாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோம்பல் உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் சிக்கல் நேரும்.
செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும். இதில் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. துத்தநாகம் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவும். உடல் ஆற்றலையும் வலுப்படுத்தும்.
லுடீன் மற்றும் பீட்டா கரோட்டினாய்டுகள் நிறைந்திருப்பதால் வயது தொடர்பான மாகுலர் சிதைவு, இரவு பார்வை இழப்பை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும், பார்வை திறனையும் மேம்படுத்த செவ்வாழை உதவும்.
செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும், தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். போதுமான அளவு கொலாஜன் இருப்பது தசைகளை பலப்படுத்தும். கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தும்.
செவ்வாழையில் வைட்டமின் பி6 இருப்பது, ரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்த சோகைக்கு தீர்வு காணவும் துணை புரியும்.
செவ்வாழையை சரியான நேரத்தில் சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்யும். கூடுதல் நன்மைகளை வழங்கும்.