search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் ஏன் வருகிறது?
    X

    மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் ஏன் வருகிறது?

    • உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
    • மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.

    மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


    மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.

    உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.


    மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

    ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

    Next Story
    ×