search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இட்லி மீந்துடுச்சா கவலைய விடுங்க.. வாங்க செய்யலாம் சில்லி மசாலா இட்லி
    X

    இட்லி மீந்துடுச்சா கவலைய விடுங்க.. வாங்க செய்யலாம் சில்லி மசாலா இட்லி

    • சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
    • மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.

    தேவையான பொருட்கள்

    குட்டி இட்லி - 20

    சமையல் எண்ணெய் - ½ கப்

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி

    கொத்தமல்லி - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி

    கரம் மசாலா - ½ தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி

    சோயா சாஸ் - ½ தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.

    குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

    2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.

    Next Story
    ×