search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    பிரமாதமான பிரியாணியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? இப்படி செய்து பாருங்க...
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரமாதமான பிரியாணியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? இப்படி செய்து பாருங்க...

    • இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி.
    • தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள்.

    இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. ஆனால் பிரியாணி பிரியர்கள் எல்லோரும் தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள். நீங்கள் பிரமாதமான பிரியாணியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த குறிப்பை பின்பற்றுங்கள்...

    * எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்தால் பிரியாணி திகட்டாது. நெய் மட்டுமே சேர்த்தால் திகட்டும். எண்ணெய் மட்டுமே சேர்த்தால் பிரியாணி கமகமக்காது.

    * பிரியாணி செய்யும் போது, ஈரல் இல்லாமல் இறைச்சி மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஈரல் இருந்தால் பிரியாணி ருசிக்காது.

    * சிக்கன் பிரியாணிக்கு ஏலம், கிராம்பு தாளிக்க வேண்டாம். திகட்டும்.

    * சிக்கன் பிரியாணியில் தயிர்தான் சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால், மட்டன் பிரியாணியில் சேர்க்க வேண்டும்.

    * இறால் பிரியாணிக்கு கொத்தமல்லி, புதினா சேர்க்கக்கூடாது. கறிவேப்பிலை மட்டும்தான்.

    * குக்கரில் பிரியாணி செய்யும்போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி மூடினால் பிரியாணி உதிரியாக வரும். குழைந்துபோகாது.

    * புதிதாக பிரியாணி செய்பவர்கள் பிரியாணி உதிரி உதிராக வர வேண்டுமென்றால் சாதத்தை தனியாக வடித்து 'கிரேவி'யுடன் கலக்க வேண்டும்.

    * பாசுமதி அரிசியை தனியாக வேகவைத்து வடிக்கும்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    * 'தம்' போடுவது பிரியாணியின் ருசியை அதிகரிக்கும். அடுப்பின் மேல் தோசைக்கல்லை வைத்து, அதன் மேலே இறுக மூடிய பிரியாணி பாத்திரத்தை வைத்து 'தம்' போடலாம்.

    * புலாவ் செய்வதற்கு அரிசி அரைவேக்காடும். பிரியாணி செய்வதற்கு அரசி முக்கால்வேக்காடும் வெந்திருக்க வேண்டும்.

    * இறைச்சியை போட்டபிறகுதான் இஞ்சி- பூண்டு விழுதை போட்டு வதக்க வேண்டும். முன்னாடியே போட்டால் விழுது, பாத்திரத்திலேயே ஒட்டிக் கொள்ளும்.

    * பிரைடு ரைஸ் செய்யும்போது ஒரு 'கப்' அரிசிக்கு அரை 'கப்' தண்ணீரும், பிரியாணிக்கு 2 'கப்' தண்ணீரும் அவசியம்.

    * பாசுமதி அரிசியை பிசைந்து கழுவாதீர்கள். அரிசி உடைந்துவிடும். அரிசியின் வாசமும் போய்விடும்.

    * பிரியாணி கமகமவென்று இருக்க வேண்டும் என்பவர்கள் பிரியாணி எசன்ஸ்' தெளித்துக் கொள்ளலாம்.

    Next Story
    ×