search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஆந்திரா ஸ்டைல் பெசரெட்
    X

    ஆந்திரா ஸ்டைல் பெசரெட்

    • உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பயறை சேர்த்து கொள்ளலாம்.
    • பச்சைப் பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,

    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    சின்ன வெங்காயம் - 10,

    பச்சை மிளகாய் - 3 ,

    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்,

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சைப் பயறுடன் கடலைப் பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.

    வெங்காயத்துடன் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

    பச்சைப் பயறு மாவுடன் அரைத்த விழுது, அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

    தோசைக் கல்லை காய வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெசரெட் ரெடி.

    Next Story
    ×