என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சமையல்
![உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்துக் குழம்பு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்துக் குழம்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/10/1833849-pathiya-kulambu.webp)
உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்துக் குழம்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரசவம் ஆன பெண்களுக்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.
- சளி, அஜீரணத்துக்கு நல்லமருந்து இந்தக் குழம்பு.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1 கப்,
பூண்டு - அரை கப்,
தக்காளி - 3,
புளி - எலுமிச்சை அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கு.
அரைக்க :
மிளகு - 3 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
கண்டதிப்பிலி - 2 சிறிய குச்சி,
சுக்கு - விரல் நீளத் துண்டு,
வால்மிளகு - அரை டீஸ்பூன்,
அரிசி திப்பிலி - சிறிதளவு,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
தனியா - 3 டீஸ்பூன்.
தாளிக்க :
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு சூடுவர வறுத்து ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
இந்த நீருடன் தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்தெடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கியதும் புளி கரைசலை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அரைத்து வைத்துள்ள பொடியை தூவுங்கள்.
கிளறி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
சளி, அஜீரணத்துக்கு நல்லமருந்து இந்தக் குழம்பு.