search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் பன்னீர் பொடிமாஸ்
    X

    மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் பன்னீர் பொடிமாஸ்

    • பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
    • இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    பூண்டு - 2 பல்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.

    * பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.

    * இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.

    Next Story
    ×