என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
பைனாப்பிள் ஜாம் வீட்டிலேயே செய்யலாம்
- அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளரவும்.
- தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
அன்னாசிபழம்- 1
சர்க்கரை- ஒரு கப்
எலுமிச்சை- அரை துண்டு
செய்முறை:
அன்னாசி பழத்தினை அதன் தோலினை நீக்கிவிட்டு பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி அதனை ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அரைத்த அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அன்னாச்சிப் பழ சிரப் கெட்டியாக ஆரம்பிக்கும், தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை உறையாமல் இருக்கும். பின்பு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான நேரங்களில் சப்பாத்தி, தோசை, பிரட் ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிடலாம்.