search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய்
    X

    செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய்

    • இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மசாலா தூள் அரைக்க

    தனியா - 4 டீஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 4 டீஸ்பூன்

    வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு - 4 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது

    எள்ளு - 2 தேக்கரண்டி

    கொப்பரை தேங்காய் துருவியது - அரை கப்

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்ய

    கத்திரிக்காய் - 1 கிலோ

    மிளகாய் தூள் - 4 டீஸபூன்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கத்திரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் 4 பாகமாக நறுக்கி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    * மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.

    * பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆற வைத்து ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.

    * உப்பு, மிளகாய் துள், அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கத்திரிக்காயில் உள்ளே வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து கத்திக்காயிலும் செய்யவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.

    * அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    * கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    * 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×