என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
சிறுதானிய வகைகளும்... அதன் நன்மைகளும்...
- வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
- வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
தினை: கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தானியம். இதன் உற்பத்தியில் இந்தியாவுக்கே முதல் இடம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் துணைபுரியும். பிரமாதப் பலன்களைத் தரும் தினையில் உருவான பலகாரங்கள் நம் உடல்நலம் காக்கும்.
கேழ்வரகு: கேழ்வரகு, வெப்பமான பகுதிகளில் விளையும் தன்மை கொண்டது. அரிசி, கோதுமையை விட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சாமை: அரிசியை விட இதில் நார்ச்சத்து பலமடங்கு உள்ளது. அதேபோல மற்ற சிறுதானியங்களை விட சாமையில் இரும்புச்சத்தும் அதிகம் உண்டு. இது, ரத்தசோகையை நீக்க உதவும். இதில் இட்லி, மிளகுப் பொங்கல் (வெண் பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.
வரகு: இது பல நாடுகளின் பாரம்பரிய உணவு. வறட்சியான நிலத்தில் கூட விளையும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு அதிக சக்தியளிக்கும். அரிசி, கோதுமையை விட இதில் நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன. இதில் புட்டு, வெண் பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாக செய்ய முடியும்.
கம்பு: இந்தியா முழுக்கப் பயிர் செய்யப்படும் தானிய வகை இது. வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும். வளரும் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
சோளம்: இந்தியாவில் பஞ்ச காலத்தில், மக்கள் பசியை அதிகம் போக்க உதவிய தானியம் இது. நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடையை அதிகரிக்க உதவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்சினை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.
சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளை தயாரிக்கலாம். சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வோம். நமது பாரம்பரியத்தைப் போற்றி வளர்ப்போம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்