search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    15 நிமிடத்தில் செய்யலாம் கோதுமை சேமியா கிச்சடி
    X

    15 நிமிடத்தில் செய்யலாம் கோதுமை சேமியா கிச்சடி

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி சாப்பிடலாம்.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டி இது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப்,

    வெங்காயம், தக்காளி - தலா 1,

    நறுக்கிய பச்சைமிளகாய் - 4,

    உப்பு - தேவைக்கு,

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - சிறிது,

    கறிவேப்பிலை - 10.

    செய்முறை

    சேமியாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துகொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் கோதுமை சேமியா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வெந்தவுடன் இறக்கவும்.

    பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கோதுமை சேமியா கிச்சடி ரெடி.

    Next Story
    ×