search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஆண்கள், பெண்கள் விரும்பும் ஸ்வெட்ஷர்ட் ஆடை நாகரீகமாக அணிய யோசனைகள்
    X

    ஆண்கள், பெண்கள் விரும்பும் ஸ்வெட்ஷர்ட் ஆடை நாகரீகமாக அணிய யோசனைகள்

    • ஸ்வெட்ஷர்ட் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது
    • ஸ்வெட்ஷர்ட் நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள்...

    ஸ்வெட்ஷர்ட்களை உடற்பயிற்சி செய்யும்பொழுது அணியக்கூடிய வசதியான ஆடை என்று குறிப்பிடுவது கடந்த காலத்தின் ஒரு விஷயம் எனலாம். இப்போது, அவை சாதாரண உடைகள் மற்றும் வீதிகளில் நடந்து செல்பவர்களில் பலர் அணியக்கூடிய ஆடை வகையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அன்றாடும் உடுத்தக் கூடியஸ்வெட்ஷர்ட்களை எப்படி அணிவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?அவற்றை நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள் !

    1.வெளியில் தோழிகளுடன் ஹோட்டலுக்குச் செல்லும் பொழுது சிறிய ஸ்கேட்டர் ஸ்கர்ட் மற்றும் மாறுபட்ட ஸ்வெட்ஷர்ட் மற்றும் ஒரு ஜோடி கணுக்கால் பூட்ஸை அணிந்து செல்லலாம். அங்கிருக்கும் அனைவரின் கவனமும் உங்களின் மீது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    2.ஸ்லிம்-ஃபிட் ஜீன்ஸ் மற்றும் உங்கள் சிறந்த ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஆண்கள் ஸ்வெட்ஷர்ட்களை இணைத்து அணியும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என்று சொல்லத் தோன்றும்.

    3.ஒரு சட்டையின் மேல் புறம் ஸ்வெட்ஷர்ட்டை அணியும் பொழுது அவை பல அடுக்குகளாகத் தோன்றினாலும் குளிர்காலத்தில் வெளியே செல்லும்போது அணிவதற்கு ஏற்ற ஆடையாக இவை இருக்கும்.

    4.ஸ்வெட்ஷர்ட்டுக்கு மேல் டி-ஷர்ட்டு அணிவதும் இப்பொழுது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது. இதனால் மந்தமாக இருக்கும் டி-ஷர்ட்டும் பளிச்சென்ற தோற்றத்தை தருவதாக இருக்கும்.இவ்வாறு அணியும் பொழுது அனைவராலும் நம்முடைய ஆடை அணியும் பாணி பாராட்டப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

    5.சரியான ஜோடி ஷார்ட்ஸ் அல்லது அழகான சிறிய பாவாடையுடன், நீங்கள் ஒரு ஸ்வெட்ஷர்ட்டை உடுத்தும்போது ஒரு புதிய ஃபேஷனை நீங்கள் அறிமுகப்படுத்துபவராக இருப்பீர்கள்.

    6.ஒரு நல்ல ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்வெட்ஷர்ட் அணியும் பொழுது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மிகவும் அழகானதாக மாற்றிவிடும். லோஃபர்கள் அல்லது ஃபிளிப் ஃப்ளாப்புகளும் ஸ்வெட்ஷர்ட்களுடன் அணிவதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா?

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா அல்லது வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் வசதியைப் பொறுத்ததாகும்.ஸ்வெட்ஷர்ட்கள் வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை நம் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகின்றன.எதுவாக இருந்தாலும், ஸ்வெட்ஷர்ட் அணிவதை விட கோடையில் ஸ்வெட்டர்களை அணிவது நடைமுறைக்கு பொருந்தாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்பொழுது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து ஈரமான ஆடைகளை அணிவதிலிருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவையாக இந்த ஸ்வெட்ஷர்ட்டுகள் செயல்படும் என்று உறுதியாக நம்பலாம்.

    ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

    ஒரு ஸ்வெட் டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள மிக அடிப்படையான வேறுபாடு, அவை தயாரிக்கப்படும் விதம்.ஸ்வெட்டர் முற்றிலும் பின்னப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.ஆனால் ஸ்வெட்ஷர்ட் அப்படி தயாரிக்கப்படுவதில்லை. ஸ்வெட்ஷர்ட் கனமான பருத்தியால் தயாராகின்றது. ஸ்வெட்டர்கள் குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகின்றன. ஸ்வெட்ஷர்ட்டுகள் நம் உடலை கதகதப்பாக வைத்திருப்பதோடு நம் உடலில் ஏற்படும் வியர்வையையும் உறிஞ்சுகின்றது. இதன் காரணமாகவே உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்வெட்ஷர்ட்களை அதிகம் விரும்பி அணிவதைப் பார்க்க முடிகின்றது. ஒரு ஸ்வெட்ஷர்ட்டில் முன்புறம் திறந்து அணிந்துகொள்வது போன்ற வசதி இருக்காது. ஆனால் ஒரு ஸ்வெட்டரின் வடிவமைப்பு அல்லது பாணியைப் பொறுத்து திறந்து மூடக்கூடிய வசதியானது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

    Next Story
    ×