என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த சோகையும்... அதனால் ஏற்படும் விளைவுகளும்....
- கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
- இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும்.
இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.
உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை 'இரத்த சோகை நோய்' என்கிறார்கள்.
கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் பிரசவ நேரத்தில் தாயும் நலமாக இருக்கமுடியும். கர்ப்பக்காலம் முழுவதுமே சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு நேரலாம். ஆனால் குறையவே கூடாது என்று சொல்லகூடிய சத்து என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சத்து குறைபாடு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.
கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும்.
கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.
மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்