search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களுக்கு உருவாகும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்தது
    X

    பெண்களுக்கு உருவாகும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்தது

    • சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படும்.
    • பெண்கள் தங்கள் உடல் நலத்தில் எப்போதும் அக்கறை கொள்ள வேண்டும்.

    வேலூர் காட்பாடியில் உள்ள இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக பணிபுரிபவர் டாக்டர் லதா லட்சுமி. இவர் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள், அதற்கு செய்யப்படும் சிகிச்சை முறை, கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோபி சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பெண்கள் தங்கள் உடல் நலத்தில் எப்போதும் அக்கறை கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படும். பைப்ராய்டு என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் அல்லாத தீங்கற்ற கட்டி ஆகும். இந்த கட்டி 35 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களுக்கு 30 சதவீதம் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    யாருக்கு கட்டி வரும்

    குடும்பத்தில் யாருக்காவது பைப்ராய்டு கட்டி இருந்தால் அவர்களுக்கு கட்டி வர வாய்ப்பு உள்ளது. சுரபி சார்ந்த வளர்ச்சி இருந்தாலும் கட்டி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அறிகுறிகள்

    பைப்ராய்டு கட்டிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக மாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும்.மாதவிடாய் இல்லாத போது ரத்தம் படுதல், வயிற்று வலி, அடிவயிற்றில் கட்டியினால் ஏற்படும் வீக்கம், கட்டியின் அழுத்தத்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு ஏற்படும். மலச்சிக்கல், குழந்தையின்மை, கருக்கலைதல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

    அதிக வயதுடைய பெண்கள், உடல் பருமன், குறைந்த குழந்தை பிறப்பு, குடும்பத்தில் யாருக்காவது கட்டியிருந்தால் அவர்களுக்கு பைப்ராய்டு கட்டி வர வாய்ப்புள்ளது.

    எந்த இடத்தில் கட்டி உருவாகும்?

    பெண்களுக்கு கர்ப்பப்பையின் வெளிப்பகுதி, நடுப்பகுதி, உள்பகுதி, வாய்ப்பகுதி, கர்ப்பப்பையின் பக்கத்தில் பைப்ராய்டு கட்டி உருவாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பைப்ராய்டு கட்டி இருக்கிறதா? என்பதை கண்டறியலாம்.

    பைப்ராய்டு கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு. 0.2 சதவீத பெண்களுக்கு மட்டுமே பைப்ராய்டு கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்ப்பு உள்ளது.

    மாத்திரைகள் மூலம்...

    குழந்தை இல்லாமல் இருக்கும் இளம் பெண்கள், மிகவும் சிறிதான பைப்ராய்டு கட்டிகள், தீட்டு நிற்கும் வயதை நெருங்கும் பெண்கள், அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்களுக்கு ரத்தப்போக்கு நிற்பதற்கும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

    அறுவை சிகிச்சை முறை

    பைப்ராய்டு கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். கர்ப்பப்பையில் பைப்ராய்டு கட்டியை மட்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம். வயது குறைந்த பெண்கள், குழந்தைக்கு காத்திருக்கும் பெண்கள், பைப்ராய்டு கட்டியினால் மறுபடியும், மறுபடியும் கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு மட்டும் கட்டியை மட்டும் அகற்றலாம். மற்றொரு சிகிச்சை முறை கர்ப்பப்பையை அகற்றுதல் ஆகும்.

    கட்டி அகற்றுவதற்கான அறிகுறிகள்

    பெண்களுக்கு தீட்டுப் போக்கு அதிகமாக ஏற்படுதல், அடிவயிற்றில் ஏற்படும் கடுமையான வலி. அடி வயிறு கனமாக இருத்தல். வெள்ளைப்படுதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது லேப்ராஸ்கோப்பி முறையின் மூலமாகவோ உடனடியாக பைப்ராய்டு கட்டிகள் அகற்றப்பட வேண்டும்.

    இப்பொழுது இருக்கும் நவீன தொழில்நுட்பத்தில் கர்ப்பப்பையில் ஏற்படும் பைப்ராய்டு கட்டிகளை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றுவது சிறந்ததாகும். ஏனென்றால் இதில் வயிற்றில் தழும்புகளோ, அதிக வலியோ, இரனியா போன்ற ஆபரேஷன்கள் மூலம் ஏற்படும் பின்விளைவுகளோ மிகக்குறைவு. அதனால் லேப்ரோஸ்கோப்பி முறையே சிறந்த முறையாகும்.

    பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்தின் தன்மை குறைந்துவிட்டால் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின் வலி தெரியும்.

    நவீன அறுவை சிகிச்சை

    ஆனால் இப்போது நடைபெறும் நவீன அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து முதுகு தண்டில் டியூப் போன்ற குழாய் பொருத்தப்படும். அதன் மூலமாக 48 மணி நேரத்திற்கு வலி இல்லா மருந்து செலுத்தப்படும். இதன் மூலம் 2 முதல் 3 நாட்களுக்கு மிக குறைந்த வலி நோயாளிக்கு உண்டாகும். இந்த சிகிச்சை முறையே சிறந்த சிகிச்சை முறையாகும்.

    சில கர்ப்பப்பை ஆபரேஷனின் போது சிறுநீரக குழாயில் ஓட்டை விழுதல், சிறுநீரகப்பை சேதம் அடைதல் ஆகியவை ஏற்படுவதாக கூறுவார்கள்.

    அலட்சியப்படுத்தக் கூடாது

    ஆனால் இது பெரிய பைப்ராய்டு கட்டிகள் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போதோ, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் போதோ ஏற்படும். சிறுநீர்பை சேதமடைவதை தவிர்க்க இப்போது சிறுநீரக குழாயில் ஸ்டண்ட் செலுத்தி சிகிச்சையின் போது சிறுநீரக குழாய் சேதம் அடைவதை தவிர்க்க முடியும்.

    கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் பெண்கள் அலட்சியப்படுத்தாமல் மகப்பேறு டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது ஆகும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×