என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
    • சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.

    சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை  அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

    இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.

    சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.

    பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.

    சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.

    நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
    • பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.

    அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.

    சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.

    இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார். 

    • சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.

    • மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
    • பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 5 முதல் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

    • பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.
    • இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக பாதுகாப்பு படையினர், சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பா.ஜ.க. அரசு ஓயாது.

    இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

    ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.

    ஒவ்வொரு மலைப்பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.

    கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர்.

    பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

    நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது படுகாயம் அடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதிசெய்யவும் பா.ஜ.க. அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.

    அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.

    • விரதம் இருப்பதால் முட்டைக் குழம்பு சமைக்க மனைவி மறுப்பு.
    • விரக்தியில் கணவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.

    சத்தீஸ்கர் மாநிலத்தில், கணவன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக விரதம் இருக்க, கணவன் வாங்கி வந்த முட்டையை சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தில் திகுரான் என்பவர் விசித்து வந்தார். இவர் நேற்று மாலை முட்டைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவற்றை மனைவிடம் கொடுத்து, முட்டைக் குழம்பு தயார் செய்ய கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் (திங்கட்கிழமை) கரு பாத் (Karu Bhaat) விழா. அடுத்த நாள் விரதம் கடைபிடிக்க இருக்கிறேன். இதனால் முட்டைக் குழம்பு சமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதனால் கணவன் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் உடலை பரிசோதனைக்கு அனுப்பி தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகற்காய் சேர்த்து கசப்பாக சமைக்கப்படும் சாப்பாடு கரு பாத் என அழைக்கப்படும். தீஜ் விழாவுக்கு முந்தைய தினம் இதை சாப்பிடுவார்கள். அதற்கு ஆடத்த நாள் நர்ஜாலா விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் விரதம் கடைபிடிப்பதற்கு முந்தைய நாள் கடைசியாக கரு பாத் சாப்பிடுவார்கள். கணவன் நீண்ட ஆயுளுடன் செழிப்புடன் வாழ்வதற்காக சத்தீஸ்கர் மாநில பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    தன்னுடைய கணவன் நீண்ட ஆயுளுடன் விரதம் இருப்பதற்காக, மனைவி முட்டைக் குழம்பு சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவனே உயிரை மாய்த்துக் கொண்டார்.

    • 2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர்.
    • நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.

    கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

    சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.

    சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

    • சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
    • அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மருந்து பொருட்கள் வாங்கியதில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் இந்த மோசடி தொடர்பாக சத்தீஸ்கரில் இன்று பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். சத்தீஸ்கர் முழுவதும் 18 இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்ப்பூர், துர்க் பகுதிகளில் உள்ள இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
    • போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    "ஐ லவ் யூ" என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார். 

    • 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் மாவோயிஸ்ட் இல்லாத நாடாக இந்தியா மாறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    • கடந்த 18 மாதங்களில் 421 மாவோயிஸ்ட்டுகள் என்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து தென்பகுதியில் 400 கி.மீ. தூரத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    கடந்த 18 மாதங்களில் 421 மாவோயிஸ்ட்டுகள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து போலீசார் கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    2026 மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தியா மாவோயிஸ்ட்டுகள் இல்லாத நாடாக மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய மாவட்டங்களில் நாராயண்பூர் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாஹலின் மகன் சைதன்யா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹலும் அவரது மகனும் ஒரே இல்லத்தில் வசிக்கும் நிலையில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் முடிவில் பூபேஷ் பாஹலின் மகனை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

     

    அமலாக்கத்துறையால் தனது மகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹல் கூறுகையில்,

    காங்கிரஸ் அதானிக்கு எதிராகப் போராடுகிறது. எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    அதானிக்கு எதிராக யாரும் குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்போது என் மகனைக் குறிவைக்கிறார்கள். நாங்கள் இதற்கு பயப்படவோ அடிபணியவோ மாட்டோம்.

    என் மகன் அவரது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் எனது பிறந்தநாளில் எனது ஆலோசகர் குறிவைக்கப்பட்டார் என்று கூறினார்.

    ×