என் மலர்
வணிகம் & தங்கம் விலை

1397.07 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: நிஃப்டியும் 378.20 புள்ளிகள் உயர்வு
- மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 77,186.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் 77,687 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகம் சுமார் 500 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. அதன்பின் உயர்வதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 11 மணியவில் 77,402.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இன்றைய குறைந்தபட்ச வர்த்தகமாகும்.
அதன்பின் ஜெட்வேகத்தில் வர்த்தகம் உயர்ந்துகொண்டே சென்றது. இறுதியாக சென்செக்ஸ் 78,583.81 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து.
அதேபோல் இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் 378.20 புள்ளிகள் உயர்ந்தது. நேற்று 23,361.05 புள்ளிகளில் இந்திய பங்குச் சந்தை நிறைவடைந்தது. இன்று காலை 23,509.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 248 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று குறைந்த பட்சமாக 23423.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23762.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
டொனால்டு டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு உத்தரவு காரணமாக நேற்று தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிவை சந்தித்தன. பின்னர் மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரியை டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால் தேசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தாலும், மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.






