என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10 கிராம மக்கள் திருப்பதிக்கு ஆன்மீக பயணம்
- 700-க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
- கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் காரிமங்கலம் போலீசார் கிராமத்தை கண்காணித்து வருகின்றனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மன்னாடிப்பட்டி, நடு கொட்டாய், முருகன் கொட்டாய் உட்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆண்டு தோறும் திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.
கொரோனா வைரஸ் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக திருப்பதிக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
இதை அடுத்து பந்தார அள்ளி சென்றாய சுவாமி கோவிலில் மேல் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தி திருப்பதிக்கு பஸ், வேன், கார் உட்பட பல்வேறு வாகனங்களில் சென்றனர்.
கிராம பொதுமக்கள் திருப்பதிக்கு ஆன்மீகம் பயணம் மேற்கொண்டதால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் காரிமங்கலம் போலீசார் கிராமத்தை கண்காணித்து வருகின்றனர்.