என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை ஏ.வி.பி. கல்வி குழுமத்தினர் பாராட்டினர்.
- பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. இதில் 12-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் 600க்கு 596 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், பள்ளியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி புவனா 595 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும் மாணவி அங்கயற்கண்ணி 594 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர். 66 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இதேப்போல் 10-ம்வகுப்பு தேர்வில் இப்பள்ளி மாணவி நக்சத்திரா 500க்கு 491 மதிப்பெண்ணும், மாணவன் தனுஜ் இமயவரம்பன் 491 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவி ரித்திகா 489 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளார்.
மாணவன் கவின் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், மாணவி ரித்திகா அறிவியலில் 100, தமிழில் 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதத்தில் மாணவர் முகமது இம்தியாஸ், நக்சத்திரா, ரிசாபேஷ்,ஸ்ரீநிஷா, தனுஜ் இமயவரம்பன் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஆனந்த், அன்பரசி, ஹன்சிகா, கவின், கவுசிக், முகமது ஷகிலா ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பொதுத்–தேர்–வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ஒருங்கிணைப்பாளர் வனிதாமணி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.