என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10-ம் வகுப்பு மாணவன் மாயம்
Byமாலை மலர்5 Jan 2023 4:02 PM IST
- தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்தார்.
- வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகி விட்டார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதப்பன் இவரது மகன் நித்திஷ் (15). கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவன் தலைமுடி மாடலாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான்.
படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்தார்.
வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கடந்த ஏழு நாட்களாக உறவினர், நண்பர்கள் என பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாரண்டஹள்ளி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மாயமான மாணவனை போலீசார் ேதடி வருகின்றனர்.
Next Story
×