என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருசநாடு அருகே 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
- தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
- குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.
போடி:
தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
கொடைக்கானல் மன்னவனூர் அரசுமேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் பழனிமுருகன் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
இது குறித்து ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கூறியதாவது:-
தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல சிறு சிறு நாடுகளாகப் பிரித்தனர். அதன்படி மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான இன்றைய வருசநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி, பெருங் கற்கால கல்லறைகள், பழைய புதிய கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் (கி.பி. 1297) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வருசநாடு தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்டது.
இதில் குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.
இந்த கல்வெட்டு முழுமையாக கிடைக்கப்பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இருப்பினும் பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்