என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனியாமூர் பள்ளி வன்முறையில் மேலும் 2 பேர் கைது
- கனியாமூர் பள்ளி வன்முறையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17- ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே எமரூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆண்டப்பன் (வயது 22), அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகாசி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






