என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்திய இருவரை காவல் உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
பகண்டை கூட்டு ரோட்டில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
- கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
- லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பகண்டைகூட்டுரோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மையனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 26) மற்றும் அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (25) ஆகிய 2 பேரும் அரசராம்பட்டிலிருந்து மையனூர் காப்புக்காட்டு அருகே உள்ள சுரேஷ் என்பவரின் கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்களைப் பிடித்து சோதனை செய்தபோது ஒரு லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.






