என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுவிடம், பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி
    X
    பசுவிடம், பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி

    பசுவிடம், பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

    ஆட்டுக்குட்டி பால் குடிக்கும்போது பசு எந்தவித எதிர்ப்பும் காட்டுவதில்லை. பாசத்தோடு பால் குடிக்க அனுமதிக்கிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள செருதியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம். இவருக்கு சொந்தமான பசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றது. அதேபோல இவர் வீட்டில் வளர்த்து வரும் ஆடு ஒன்றும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குட்டி போட்டுள்ளது. 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன்பு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பசுவை மாட்டு கொட்டகையில் கட்டி இருந்தனர். அப்போது 2 மாத ஆட்டுக்குட்டி பசுவிடம் பால் குடித்தது. அன்றுமுதல் அந்த ஆட்டுக்குட்டி தனது பசியை போக்கிக்கொள்ள அடிக்கடி பசுவிடம் பால் குடித்து வருகிறது. ஆட்டுக்குட்டி பால் குடிக்கும்போது பசு எந்தவித எதிர்ப்பும் காட்டுவதில்லை. பாசத்தோடு பால் குடிக்க அனுமதிக்கிறது.

    இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    Next Story
    ×