என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் பெற விண்ணப்பிக்கலாம்

    இரண்டு வகை தொழில் இனங்களில் பதிவு செய்தோர், பாதுகாப்பு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்க்கும் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள், பாதுகாப்பு உபகரணம் பெற உடனே விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அமைப்புசாரா ஓட்டுனர் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, ஷூ, சீருடை மற்றும் முதலுதவி பெட்டி அடங்கிய உபகரணம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், இரண்டு வகை தொழில் இனங்களில் பதிவு செய்தோர், பாதுகாப்பு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), காமராஜ் நகர் முதல் வீதி, பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், திருப்பூர் - 641602 என்கிற முகவரியில் வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2477276 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×