என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயம் நகராட்சி பகுதியில் ரூ.14½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
காங்கயம்:
காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கயம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் பொது நூலகத்துறை மூலம் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முழு நேர கிளை நூல கத்தினை திறந்து வைத்தார்.
மேலும் 2-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.62 கோடியில் வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக தினசரி மற்றும் வாரச்சந்தை கடை கள் கட்டும் பணியினையும், 7-வது வார்டு அண்ணா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.4.4 கோடியில் பதுமன் குளம் நிலைய மேம்படுத்துதல் பணியினையும் தொடங்கி வைத்தார்.
13-வது வார்டு சமுதாய கழிப்பிடம் கட்டும் திட்டத் தின் கீழ் ரூ.25 லட்சத்தில் காங்கயம் நகராட்சி சத்யாநகர் பகுதியில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியினையும், காங்கயம் நகராட்சி 13-வது வார்டு கே.ஜி.கே.நகரில் சமுதாய கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத் தில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.14.56 கோடியில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.
விழாவில் காங்கயம் நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ், காங்கயம் தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் காயத்ரி பி.சின்னச்சாமி, நகராட்சி ஆணையாளர் வெங்க டேஸ்வரன், செயற்பொறியாளர் திலீபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






