search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  ரூ.2.80 கோடி நலத்திட்ட உதவிகள்
    X

    மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா உதவித்தொகை வழங்கினார்.

    காரைக்காலில் ரூ.2.80 கோடி நலத்திட்ட உதவிகள்

    • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.
    • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ரூ.2.80 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிட நலத் துறையின் உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் முகம்மது மன்சூர் பேசுகையில், இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை களுக்கான உதவித்தொகை அவர்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும். கல்விக்காக செலவு செய்வதை யாரும் குறை கூற மாட்டார்கள். சுய உதவி குழுக்கள் மூலம் நிறைய திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    Next Story
    ×