என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருசநாடு அருகே கிராமபுறங்களில் பைக்கில் சென்று கஞ்சா விற்பனை 3 பேர் கைது
- தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- வருசநாடு பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டு வருபவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்க ளின் சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்டு வரு கிறது. மேலும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்கள் தங்கள் யுக்திகளை மாற்றி வருகின்றனர். அதன்படி ஒரே இடத்தில் மொத்தமாக கஞ்சா விற்பனையை நடத்தாமல் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்று வருகின்றனர்.
குறிப்பாக கஞ்சா வாங்கு பவர்களின் செல்போன்கள் மூலம் தகவல் வந்தால் சம்பவ இடத்துக்கே சென்று பைக்கில் கொடுத்து வருகின்றனர். இதனால் மொத்தமாக கஞ்சா பறிமுதல் தடுக்கப்படும் என்று அவர்கள் நினைத்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரும் அவர்களை கண்டறியும் வகையில் வெவ்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
வருசநாடு பகுதியில் இதே போல பைக்கில் சென்று கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்த னர். சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அழகுராஜா (வயது 20), லெனின் குமார் (21), பிரேம்குமார் (18) ஆகிய 3 பேரும் 200 கிராம் கஞ்சாவை பைக்கில் வைத்து தங்களுக்கு ஆர்டர் வரும் இடத்துக்கு நேரடியாக சென்று விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.