என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
- உத்தமபாளையம் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற வாலிபர் விபத்தில் பலியானார்.
- மேலும் பெண் மற்றும் மற்றொரு வாலிபர் விபத்தில் உயிரிழந்தனர்.
உத்தமபாளையம்:
கேரளமாநிலம் எர்ணாகுளம் திருகளத்தூர் பகுதியை சேர்ந்த அனுப்(32). இவர் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள கிரசரில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
அனுப் மற்றும் அவருடன் வேலைபார்த்த 4 பேர் கேரளமாநிலத்தில் உள்ள தூக்குபாலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் சின்னமனூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
பைபாஸ் சாலையில் கோகிலாபுரம் விளக்கு பகுதியில் காரை நிறுத்திவிட்டு அனுப் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் அனுப் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதை பார்த்ததும் அதிருப்தி அடைந்த அவரது நண்பர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பை சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அனுப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூரை சேர்ந்தவர் வீரக்குமார்(35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்னமனூர்-ஓடைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் வீரக்குமார் பைக் மீது மோதியது.
இதில் காயமடைந்தவரை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(30). இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வடுகபட்டி-இ.காமாட்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக சென்றதால் நிலைதடுமாறிய பைக் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற கவிழ்ந்த பேச்சியம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது.
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்