search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரத்தை பயன்படுத்தி மீன்பிடித்தபோது இறந்த கூலித் தொழிலாளியின் பிணத்தை சாலையில் வீசி சென்ற 3 பேர் கைது
    X

    மின்சாரத்தை பயன்படுத்தி மீன்பிடித்தபோது இறந்த கூலித் தொழிலாளியின் பிணத்தை சாலையில் வீசி சென்ற 3 பேர் கைது

    • 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர்.
    • தலைமறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    கள்ளக்குறிச்சி,அக்.22-

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி. இவருக்கு தியாக துருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் பகுதி யைச் சேர்ந்த பெரியசாமி (40), மணிகண்டன் (41) அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோ ரை தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். வேலை முடிந்ததும் அனை வரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜகுருநாதன் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துச் சென்று அருகில் உள்ள மயூரா ஆற்றில் மின்சாரம் செலுத்தி 5 பேரும் மீன்பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி யதில் பெரியசாமி கீழே கல்லின் மீது விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக கூறப்படு கிறது.

    இதனைத் தொடர்ந்து ராஜகுருநாதன், மணி கண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர். மீண்டும் நள்ளிரவில் ராஜகுருநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மயூரா ஆற்றிற்கு சென்று அங்கு முட்புதரில் மறைய வைத்திருந்த பெரியசாமி யின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவே உட்கார வைத்துக்கொண்டு சென்றனர். ராஜகுருநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து கொண்டு உடலை பிடித்துக் கொண்டு அசகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உடலை போட்டுவிட்டு சென்று விட்டனர். இறந்து கிடந்த பெரிய சாமி யின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பெரிய சாமியின் உடலை கைப்பற்றி கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை செய்ததில் ராஜகுரு நாதன் நிலத்திற்கு விவசாய வேலைக்கு ஆட்களை அழைத்து சென்றதும். வேலை முடிந்ததும் ஆற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது இறந்து போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய 3- பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    Next Story
    ×