search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்ட எல்லையில் கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது
    X

    சேலம் மாவட்ட எல்லையில் கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது

    • 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்த வர்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்ட எல்லைகளில் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மற்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகே உள்ள சேலம் மாவட்ட எல்லையான தலை வாசல், ஆத்தூர், மணிவிழுந்தான், கல்வராயன்மலை கிராமங்களில் போலீசார் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமசேஷபுரம், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தலைவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனடியாக போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 25), ராமசாமி (58) மற்றும் காமக்காபாளையம் பகுதியை சேர்ந்த பெரியம்மாள் (60), வடகுமறை பகுதியை சேர்ந்த சிவகாமி (60) ஆகிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு உடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×