என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை மாநில கல்லூரியில் படிக்க 40 ஆயிரம் மாணவர்கள் ஆர்வம்
- பி.ஏ. தமிழ் பாடப்பிரிவை 9,410 பேரும், பி.எஸ்.சி. வேதியியல் பாடப்பிரிவை 8,229 பேரும், பி.ஏ. ஆங்கிலம் படிக்க 6,717 பேரும் கேட்டுள்ளனர்.
- சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் 7,599 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு வெளியிடப்பட்டது. 29-ந்தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
வழக்கம் போல இந்த வருடமும் பி.காம் (பொது), பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடுமையான தேவை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள அரசு கல்லூரிகளில் சென்னை மாநில கல்லூரியில் படிக்கத்தான் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து முதலிடத்தில் உள்ளது. அதில் பி.காம் (பொது), ஆங்கில வழி முதல் ஷிப்டிற்கு 11,604 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.ஏ. தமிழ் பாடப்பிரிவை 9,410 பேரும், பி.எஸ்.சி. வேதியியல் பாடப்பிரிவை 8,229 பேரும், பி.ஏ. ஆங்கிலம் படிக்க 6,717 பேரும் கேட்டுள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு 8,003 பேரும், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் 7,599 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை ராணி மேரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் (பொது) பாடப்பிரிவுக்கு 7006 மாணவிகள், ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க 6,887 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்த கல்லூரியாக மாநில கல்லூரியும் 2-வதாக கோவை அரசு கல்லூரியில் 34,743 விண்ணப்பங்களும் 3-வதாக வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் 29,260 பேரும், அதனை தொடர்ந்து ராணிமேரி கல்லூரிக்கு 24,256 பேரும், திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு 23,700 பேரும், சேலம் அரசு கல்லூரிக்கு 22,913 பேரும், சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை கல்லூரிக்கு 20,141 பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்