என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூங்காவில் கிடந்த மீன் வலையில் சிக்கி தவித்த 5 அடி நல்ல பாம்பு
- பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் பூங்கா உள்ளது.
- பழைய மீன் வலையில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு சிக்கி உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தவித்த நிலையில் கிடந்தது.
பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் பூங்கா உள்ளது. இங்கு கிடந்த பழைய மீன் வலையில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு சிக்கி உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தவித்த நிலையில் கிடந்தது.
இந்த பூங்காவிற்கு விளையாட சென்ற சிறுவர்கள் இதை பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மற்றும் தீயணைப்புத் துறையினர் வலையில் சிக்கி தவித்த பாம்பை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.
Next Story






